Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!

Change in the curriculum for school students! The announcement made by the Department of Education!

Change in the curriculum for school students! The announcement made by the Department of Education!

பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!

தமிழகத்தில் ஒரு மாத காலம்  கோடை விடுமுறை அளிக்கபட்டிருந்தது.  அதன் பின்னர்  பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்  தற்போது அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும் பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு  முதல் பத்தாம்  வகுப்பு  வரை மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஆறாம் வகுப்பு  முதல் பத்தாம்  வகுப்பு  வரை மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் வகுப்புகள் 7 பாடவேளைகளாக நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 6 ஆக குறைக்கப்படவேன்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வி துறை  தெரிவித்துள்ளது.  பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள பாட திட்டதின்  கீழ் அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வரும் 2023  ஆம்  கல்வியாண்டில்லிருந்து  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகளில்  நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தபடுவதாகவும் அந்த அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது.

Exit mobile version