Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சென்னை ரயில்வே கோட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்தது.

1. காட்பாடி ஜோலார்பேட்டை இடையே மெமோ விரைவு ரயில் ( வண்டி எண் 06417) தினமும் காலை 9:30 மணிக்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கமாக ஜோலார்பேட்டை – காட்பாடி (வண்டி எண் 064 18) இந்த ரயில் 12:40க்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை ஜனவரி 7, 11,27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. வேலூர் கண்டோன்மன்ட்- அரக்கோணம் இடையே மெமு விரைவு ரயில் (வண்டி எண் 067 36) காலை 10 மணிக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கம் அரக்கோணம் -வேலூர் கண்டோமன்ட் மதியம்( வண்டி எண் 06735)மதியம் 2:05 இயக்கப்படுகிறது. இது ஜனவரி 24ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

3. கோவையிலிருந்து தினமும் காலை ஆறு 15க்கு புறப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் (வண்டி எண்-12680) பகல் 1:50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து 2:30 புறப்படும் இந்த வண்டி (வண்டி எண் 12679) இரவு 10:15 மணிக்கு கோவை சென்றடையும்.

அதேபோல் மைசூரில் இருந்து தினமும் காலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12615) பகல் 2:25க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து 3:30 க்கு புறப்படும் லால்பாக் விரைவு ரயில் (வண்டி எண் 12607) இரவு 9:30 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

இந்த ரயில்கள் அனைத்தும் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே ஜனவரி 24ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில்கள் காட்பாடியில் இருந்து புறப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10:20 மணிக்கு புதன்கிழமை தோறும் சாய்நகர் சீரடி செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண் – 22601), ஜனவரி 11ஆம் தேதி மட்டும் பகல் 12:20 க்கு (2 மணி நேரம் காலதாமதம்) புறப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் பகல் 1:35 மணிக்கு மங்களூர் செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண் 22637) ஜனவரி 11ஆம் தேதி மட்டும் பகல் 2 மணிக்கு (20 நிமிடம் தாமதம்) கிளம்பும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் பகல் 1:35 க்கு செல்லும் மைசூர் அதிவிரைவு ரயில் (வண்டி எண் 22609) ஜனவரி 11ஆம் தேதி மட்டும் பத்து நிமிடம் தாமதமாக 1:55 க்கு கிளம்பி செல்லும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version