5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை!

0
204

5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை! 

தமிழ்நாட்டில் ஐந்து நிமிடத்தில் ஆட்சி மாறுவதாக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் வந்ததையொட்டி பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் அண்ணா, பெரியார், திராவிடம், தமிழ்நாடு, அமைதி பூங்கா, மத நல்லிணக்கம்,சமூகநீதி, பெண்கள் பாதுகாப்பு, வார்த்தைகளையும் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தை வரிகளையும் தவிர்த்து உரையாற்றியதால் ஆளுநரின் உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் எதிர்ப்புகள் கிளம்பி  பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் ஆளுநரின் முடித்தவுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். எனவே அச்சடிக்கப்பட்ட ஒரே படிக்காத ஆளுநரின் உரையை சட்டசபையில் இருந்து நீக்கி தீர்மானம் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இந்த தீர்மானம் உடனடியாக நிறைவேற்றப்படவே முதலமைச்சர் பேசி கொண்டு இருக்கும் பொழுதே ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கடும் கண்டனங்களை ட்விட்டர் மற்றும் போஸ்டர் அடித்து ஒட்டி வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த சம்பவங்களுக்கு பிறகு பாஜகவினர் ஆளுநருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக article 356 என்ற  ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனதை அடுத்து நேற்று வெளியான வாரிசு படத்திலும் ஐந்து நிமிடத்தில் ஆட்சி மாறும் என விஜய் பேசி இருப்பார். இதைப் பின்பற்றி விதி 356-யை பயன்படுத்தி மாநில அரசை மத்திய அரசு கலைக்கும்  என வலியுறுத்தி ட்ரெண்டிங்காகி வருகிறது.

தற்போது இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஐந்து நிமிடத்தில் ஆட்சி மாறும் என்ற ஹேஸ்டேக்கை பாஜகவினரும் , வலது சாரி ஆதரவாளர்களும்  டிவிட்டரில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.  தமிழ்நாட்டில் ஆளுநருக்கு மாநில அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்களை கொண்டு ஸ்டாலின் அரசை கலைக்க வேண்டும் என்று பாஜகவினர் வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.