Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!

#image_title

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோருக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய கே.சி. பழனிசாமியின் மனுவை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017, செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என கே.சி. பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ரிட் மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து கடந்த 18-ஆம் தேதி முடித்து வைத்தது.

இதனிடைய இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த ரிட் மனுவை முன்னெடுக்க விரும்பவில்லை என தெரிவித்ததை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் அவரது ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

Exit mobile version