தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

0
217

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கால்சியம், மெக்னீசியம் போன்ற துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நம் உடம்பில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் இவை மருந்தாக பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது நம் வீட்டின் அருகில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றான நெல்லிக்காயில் அதிகம் விட்டமின் சி உள்ளது. 100 கிராம் நெல்லிக்கனியில் 600 மிலி விட்டமின் சி சத்து உள்ளது. இவை ஆரஞ்சு பழத்தை விட எட்டு மடங்கு அதிகமாகும்.

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் சர்க்கரையின் அளவுகளை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்கனியை சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நெல்லிக்கனியின் உள்ள விட்டமின் சி யானது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

தினந்தோறும் தேனில் ஊறவைத்த நெல்லிக்கனியை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடம்பில் புதிய சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி யானது அதிக கொலஸ்ட்ராலை குறைக்கிறது மற்றும் இருதயம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.