செங்கோலால் டெல்லியில் பரபரப்பு!! மன்னராட்சி அரசியலா எதிர் கட்சிகள் கேள்வி??
நேற்று தான் தான் 18 வது மக்களவைக்கான சபாநாயகர் தேர்தல் பாராளுமன்ற வளாகத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது. இதில் பாஜகா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜஸ்தான் கோட்டா தொகுதி எம்.பி-யான ஓம்பிர்லா வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக சபாநாயகராக பதவியேற்றார்.அவரை பிரதமர் மோடியும்,எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஒன்றாக இணைந்து நாற்காலியில் அமர வைத்தனர்.இரண்டாவது முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓம்.பிர்லாவுக்கு எம்.பி-கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் மோடி பேசுகையில், இப்பதவியில் அமர்ந்திருப்பது மூலம் உங்களுக்கான மிகப்பெரிய பொறுப்பு அதிகரித்துள்ளது எனவும் ,மேலும் அதனை உங்கள் அனுபவத்தால், எங்களுக்கு நல்லதாக மாற்றி காட்டுவீர்கள் என்றும் நம்புகிறோம். இரண்டாவது முறையாக சபாநாயகராக பதவியேற்றது ஒரு சாதனை எனவும் தெரிவித்துள்ளார்.பின்னர் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உங்கள் வேலையைச் செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவும் எனவும் மேலும் இந்த சபை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று நாடளுமன்றத்தில் புதிதாக ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.அதாவது பிரதமர் மோடி அவர்கள் லோக்சபாவில் உள்ள சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை வைத்தத்தார்.இது தற்போது சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறியுள்ளது.இந்த செங்கோல் 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது ஆகும்.மோடி அவர்கள்,” செங்கோல் என்பது ஒரு அதிகார மாற்றத்தின் அடையாளம்” என குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இதனை சமாஜ்வாதி கட்சி எம்.பியான, ஆர்.கே.சவுத்ரி,கடுமையாக விமர்சித்துள்ளார்.உடனடியாக லோக்சபாவில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல்,அதை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவத்துள்ளது. செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி., சவுத்ரி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தாகத் தகவல் கசிந்துள்ளது.இச்சம்வம் டெல்லி நாடளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.