Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோயாளியின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட செல்ஃபோன் சார்ஜர் வயர்!

ஒரு திரைப்படத்தில் நடிகர் கமலின் வயிற்றில் தவறுதலாக கைக்கடிகாரத்தை வைத்து தைத்து விடுவார்கள். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அதனை எடுப்பார்கள். அதிலாவது வயிற்றுக்குள் வைத்து தைப்பதால் தான் அந்த நிலை ஏற்படும்.

ஆனால் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ஒருவர் தான் அலைப்பேசி சார்ஜர் வயரை முழுங்கிவிட்டதாக மருத்துவமனையில் அனுமதித்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தியை சேர்ந்த அந்த நபர், தான் தவறுதலாக சார்ஜர் ஒயரை விழுங்கி விட்டதாகவும் அதனால் தனக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது என்று கூறி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அவரது சிறுநீர் பையில் சார்ஜர் ஒயர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் வாய் வழியாக அவர் சார்ஜரை உட்கொண்டிருந்தால் அது சிறுநீர் பைக்குள் போக வாய்ப்பில்லை என்பதால் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் முதலில் அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். அனுபவம் பெற்ற மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் சிறுநீர் பையிலிருந்து ஒயர் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

இறுதியில் அவர் ஆண் பிறப்புறுப்பின் வழியாக சார்ஜரை உள்ளே தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. இது நடந்து ஒரு வாரம் கழித்தே அவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். இதனால் இவரது மனநிலை குறித்து ஆராய்ந்து வருபவர்கள், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Exit mobile version