யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மதியம் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதற்க்கு காரணம் பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்தனர்.
தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தங்கும் தங்கியிருந்த சவுக்கு சங்கர், அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி தேனி போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தேனி நகர காவல் ஆய்வாளர் விசாரித்து வந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பெயரில், மாவட்ட ஆட்சியர் ஷஜுவனா உத்தரவின் பெயரில் பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ணியில் மதுரை நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் கைத்து செய்யப்பட்டார்.