Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் கணவர் முதலிரவில் என்னை இப்படி எல்லாம் செய்தார்! பின் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்!

திருமணமான அடுத்த நாளிலேயே என் கணவர் ஒரு சைக்கோ, என்னைத் துன்புறுத்தினார். என் முடியை வெட்டினார் என்று மணமகள் ஏமாற்றிய சம்பவம் காரைக்குடி அருகே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காரைக்குடி அருகே புதுவயல் சந்தப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு வயது 30. அறந்தாங்கி சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு வயது 24. இருவருக்கும் கடந்த 17ஆம் தேதி அன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

முதல் இரவுக்கு அடுத்த நாள் மணமகள் சூர்யா படுக்கை அறையில் மயங்கி கிடந்துள்ளார். அதனைப் பார்த்த வெற்றிவேல் பயந்துபோய் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சூரியாவை விசாரித்த போலீசார், சூர்யா கூறியதாவது, ” என் கணவர் ஒரு சைக்கோ. முதலிரவில் என்னை வரதட்சணை கேட்டு மிகவும் துன்புறுத்தி அடித்தார். மேலும் என் முடியை வெட்டி விட்டார். எனக்கு மயக்க மாத்திரை கொடுத்தார்” என்று எல்லாம் அடுக்கி வைத்து இருக்கிறார்.

 

அதற்கு பதிலளித்த வெற்றிவேல் “சூர்யா பொய் சொல்கிறார். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. நான் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று கதறி அழுதுள்ளார்.

 

இரண்டு குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டையினால் காரைக்குடி டிஎஸ்பி அருண் புதுமணத் தம்பதிகளுடன் விசாரணையை மேற்கொண்டார். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

 

முதலில் வெற்றிவேல் இடம் டிஎஸ்பி செய்து விசாரணையை ஆரம்பித்தார்.

அதில் வெற்றிவேல் ” நான் எனது பழைய கால வாழ்க்கையைப் பற்றி கூறினேன். அதில் ஒரு பெண்ணை நான் காதலித்தேன் என சூர்யாவிடம் கூறினேன். ஆனால் இப்போது அவளை மறந்து விட்டேன். உன்னுடன் என் வாழ்க்கையை தொடங்குவேன். உன்னை நான் கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்” என்றெல்லாம் வெற்றிவேல் கூறிவிட்டு தூங்கிப் போய் இருக்கிறார்.

 

சூரியாவிடம் விசாரணையை டிஎஸ்பி ஆரம்பித்த பிறகுதான் பல உண்மைகளும் வெளிவந்திருக்கின்றன. மணமகள் சூரியாவிர்க்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் இந்த திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். மேலும் தனது கணவனை பழிவாங்க எண்ணி இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மணமக்களின் விருப்பம் இல்லாமல் திருமணத்தை நடத்தியதற்காக டிஸ்பி அவர்களின் குடும்பத்தாரை எச்சரித்து உள்ளார். இரு குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தனர். இந்த சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Exit mobile version