UIDAI: ஆதார் அட்டையில் இலவசமாக அப்டேட் செய்துக் கொள்ள கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை குறித்து முக்கியமான தகவல் ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது வெளியிட்டுள்ளது. இந்த ஆணையம் கடந்த ஆண்டே ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இலவசமாக செய்து கொள்ளும் வகையில் கால அவகாசம் கொடுத்தது.
இதனின் இறுதி அவகாசமாக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி கூறியிருந்தனர். அந்த தேதிக்குள் ஏதேனும் ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இலவசமாக செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். பொதுமக்கள் பலரும் ஆதார் அட்டை குறித்து திருத்தம் செய்ய ாதிருந்ததால் மீண்டும் வாய்ப்பு கொடுத்து இம்மாதம் 14ஆம் தேதி வரை இலவசமாக மாற்றம் செய்த கொள்ளும் வகையில் நீட்டிப்பு செய்துள்ளனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் ஆதாரில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்தே செல்போன் அல்லது லேப்டாப் மூலம் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் மற்றும் செய்து கொள்ளலாம். மேற்கொண்டு கால வரையறுக்கப்பட்ட தேதிக்கு பிறகு மாற்றம் செய்யும் பட்சத்தில் ரூ 50 முதல் ரூ 100 வரை வசூல் செய்யப்படும்