கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்!
முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா,உபெர் போன்ற கேப் சேவை நிறுவனங்களும் போக்குவரத்து வசதியை கொடுத்து வருகின்றது. மேலும் ஓலா ,உபெர் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் தனியார் வாகனங்களாக இருந்தாலும் அதில் பயணம் செய்பவர்களின் வசதிகேற்ப உள்ளது.
இதுபோன்ற வாகனங்களில் நெரிசல் இருக்காது என்பதால் பெரும்பாலும் மக்கள் இந்த போக்குவரத்து சேவையை விரும்புகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தொற்று பரவாமல் இருபதற்காக பேருந்து போன்ற போக்குவரத்தை தவிர்த்து கேப் சேவையை விரும்பினார்கள் அதனால் இந்த சேவை பெரிதும் வளர்ச்சி பெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் டாக்சி ,ஆட்டோ ,இருசக்கர வாகனங்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகள் பணம் செலுத்துவதை தவிர ,ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஓட்டுநர்கள் முன்பதிவை ரத்து செய்வதாக கூறபடுகிறது.மேலும் அவர்கள் நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சவாரி செய்வதை ரத்து செய்வதாகவும் பல புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
இரவு நேரங்களில் டாக்சி ,ஆட்டோ டிரைவர்கள் பிக் அப் பாயின்ட்டுக்கு வர மறுப்பதால் சிரமம் ஏற்படுகிறது.மேலும் சேரும் இடம் கட்டணம் முறைகளை பற்றி கேள்வி கேட்ட பிறகு சவாரி ரத்து செய்கின்றனர்.இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான ஸ்பார்ட் அபராதங்களை மாநில அரசு திருத்தம் செய்துள்ளது.
அதன்படி ஆப்கள் மூலம் செய்யும் கார்கள் ,ஆட்டோ முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால்மோட்டர் வாகன சட்டத்தின் படி ரூ 500அபராதம் விதிக்கப்படும்.அதனையடுத்து பயணிகளை ஏற்றி செல்ல மறுத்தால் ரூ 50அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.மேலும் இந்த பிக்குவரத்து விதிமீறலுக்கான ஸ்பாட் அபராதம் இன்று முதல் வசூல் செய்யப்படும் என பெருநகர சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.