Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாகன சோதனையில் பிடிபட்ட 1 கோடி.! அதிரடியான விசாரணை நடவடிக்கை

காவல்துறையினர் சோதனைச் சாவடியில் ஒரு கோடி பணத்துடன் காரில் சென்றவர்கள் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச் சாவடியில் வழக்கம்போல காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தது.

 

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதால் பணத்தையும், அதனைக் காரில் கொண்டு வந்த 3 பேரையும் பிடித்து வைத்து, வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த வருமான வரித்துறையினர் பணம் கொண்டுவந்த நபர்களிடம் விசாரித்து வருகின்றனர். இதற்கு முன்பு ஊரடங்கு நேரத்தில் 2 கோடி பணத்துடன் இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கி உரிய ஆவணங்களை ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version