ஏப்ரல் 1 முதல் செக்புக் மற்றும் பாஸ்புக் செல்லாது! வங்கிகள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
பொதுத்துறை வங்கிகளின் செய்ல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஓர் வங்கியோடு மற்றொரு வங்கி இணைப்பு நடவடிக்கை 2019யில் மத்திய அரசு அறிவித்தது.மத்திய அரசின் அறிவிப்பின் படி,ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும்,ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டது.
இதே திட்டத்தினை பின்பற்றி அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடனும்,விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பாங்க ஆப் பரோடாவுடனும் இணைக்கப்பட்டது.இந்த இணைப்பு திட்டத்தை தொடர்ந்து ,வரும் ஏப்ரம் ஒன்றாம் தேதி முதல் இணைபிற்குள்ளான எட்டு வங்கிகளின் காசோலைகள் மற்றும் பாஸ்புக்குகள் செல்லுபடியாகாது என கூறப்பட்டுள்ளன.அந்தவகையில் விஜயா வங்கி,கார்ப்பரேஷன் வங்கி,ஆந்திரா வங்கி,சிண்டிகேட் வங்கி,ஓரியண்டல் வங்கி,யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகளின் காசோலைகள் மற்றும் பாஸ்புக்குகளை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என வங்கிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.