புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் சட்டமேதை செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா
புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் சட்டமேதை செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் 139வது பிறந்தநாள் விழா மற்றும் அவரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலியும் செல்லான் நாயகர் நற்பணி மன்றம் சார்பாக புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் இன்று 12.09.2022 இனிதே நடைபெற்றது.
விழாவினை தலைமையேற்று நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன்,சிறப்பு விருந்தினர் மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர் கோ.நேரு, மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ.சுகுமாறன் , புதுச்சேரித் தன்னுரிமை கழகம் தூ.சடகோபன், சமூக நீதிப் பேரவை து. கீதநாதன், நிகழ்ச்சி வரவேற்புரையாளர் முனைவர் அ.இராமதாஸ், செல்லான் நாயகர் அவர்களின் பேரன்கள் வே.சந்திரவர்மா ,மு.ராஜேந்திர வர்மா ,வே. நவநீத வர்மா, மு.போஜராஜ் வர்மா,விழா அமைப்பாளர் அ.அருண் மொழி சோழன்,மற்றும் மு.ரங்கநாதன் அவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லான் நாயகரின் சமுக நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக விழாவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவற்றை புதுச்சேரி அரசு பரிவோடு பரிசளித்து ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்:
1. புதியதாக அமைய உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு சட்டமேதை செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பெயர் வைக்கவேண்டும்.
2. புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பங்கினை அங்கீகரித்து அவரை சிறப்பிக்கும் வகையில் புதுச்சேரி அரசு அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும்.
3. புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர் பட்டியலில் விடுபட்டுள்ள செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பெயரை சேர்க்க வேண்டும்.
4. ஒவ்வொரு ஆண்டும் செவாலியே செல்லான் நாயகர் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் புதுச்சேரி அரசு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும்.
5. புதுச்சேரி நகரத்தின் முக்கிய வீதிக்கு செவாலியே செல்லான் நாயகர் வீதி என்று பெயர்சூட்ட வேண்டும்.
நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய சிறப்பு விருந்தினர் மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர் கோ.நேரு அவர்கள் இத்தீர்மானத்தை அடுத்துவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாகபேசி நல்லதோர் முடிவை இந்த அரசு எடுக்க பாடுபடுவேன் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.