Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொறுத்திருந்து பாருங்கள்! டிடிவி தினகரன் ஆருடம்

விரைவில் தமிழகம் வரும் சசிகலா அதிமுகவை மீட்டெடுப்பதற்காக தன்னுடைய சட்டப் போராட்டத்தை ஆரம்பிப்பார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் மகேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் அந்த சமயத்தில் போய் அவருக்கு மரியாதை செய்வோம் தமிழகத்தின் எல்லையில் இருந்து சென்னை வரையில், சசிகலாவிற்கு மக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க இருக்கிறார்கள். சசிகலாவிற்கு வழங்கப்படும் வரவேற்பு காரணமாக யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய வருகையை தமிழ்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

யார் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், யார் யாரால் மன்னிக்கப்பட வேண்டும், என்பது தொடர்பாக காலம் வரும்போது பதில் தெரியும் என தான் மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று கேபி முனுசாமி தெரிவித்ததற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன். திமுக ஆட்சிக்கட்டிலில் அமர கூடாது என்பதே எங்களுடைய நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன். அதிமுகவை மீட்டு எடுக்கும் போராட்டத்தை சசிகலா நடத்துவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

நிச்சயமாக அதிமுகவை மீட்டெடுப்போம் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் சிந்தித்து ஒரு நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். சட்டசபை தேர்தலில் நாங்கள் எவ்வாறு போட்டியிடுவோம் என்பதை சற்று பொறுத்திருந்து கவனியுங்கள். சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து நம்மை வழிநடத்துவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version