சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது அதில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த அகமது என்பவரிடம் சந்தேகத்தின் பெயரில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர் அவரது உடமைகளை எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 344 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர் அதேபோல் கொச்சியில் இருந்து சென்னை உள்நாட்டு முனையத்திற்கு விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது அப்துல் அஜிஸ் முஸ்தாக் ஆகியோரை சோதனை செய்தனர் அவர்களது உடைமைகள் மறைத்து வைத்து கடத்தி வந்த 81 லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ 80 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
மேலும் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மது இஷார் முகமது ஜாபீர் ஆகியோரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த 35 லட்சம் மதிப்புள்ள 902 கிராம் தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் 5 பேரிடம் ஒரே நாளில் இருந்து ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 320 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இது தொடர்பாக சம்பந்தமானவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.