Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! பின்பற்றுவார்களா வாகன ஓட்டிகள்?

சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் போது நான்கு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்ற பம்பரால் ஏர்பேக்ஸ் திறப்பது இல்லை என்ற காரணத்தால் விபத்துகள் ஏற்பட நேர்ந்தால் பொதுமக்கள் உயிரை இழந்து விடுகிறார்கள் என்று தெரிவித்து மத்திய அரசு கார் போன்ற நான்கு சக்கர வாகனத்திற்கு முன்பாக இருக்கின்ற பம்பரை அகற்ற ஒரு உத்தரவை பிறப்பித்தது.

மத்திய அரசின் உத்தரவுகளை பல வாகன ஓட்டிகள் அதைப் பின்பற்றவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதோடு இது தொடர்பாக நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டு உள்ள பம்பரை அகற்ற உத்தரவிட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முதல் கார் வைத்திருக்கும் கடைகோடி நபர் வரையில் பம்பரை அகற்றினார்கள். மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி ஆதிகேசவலு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் கம்பரால் விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மரணமடைகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் தகவல்கள் எதுவும் கிடையாது. பம்பர் கடந்த 1920 ஆம் ஆண்டு வருடம் முதல் வாகனங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. இது வாகனத்தின் கூடுதல் வசதி மட்டுமே என்று வாதிடப்பட்டது.

இதனை அடுத்து உரையாற்றிய நீதிபதிகள் பம்பர் வாகனங்கள் அதிவேகத்தில் சாலைகளில் பயணம் செய்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அவசியம் என நினைத்து மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்க இயலாது. மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட இயலாது வாகனங்களில் இருக்கின்ற பம்பர்களை அகற்ற வேண்டும் மத்திய அரசின் உத்தரவை மாநில அரசுகளே ஏற்றுக் கொண்டு இருப்பதால் பம்பருக்காண தடை நீடிக்கும் என்று தெரிவித்தார்கள்.

Exit mobile version