தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உள்துறை செயலகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் ஆணையராக பணியாற்றிய ஏ.கே விஸ்வநாதனுக்கு பதில் மகேஷ்குமார் அகர்வால் புதிய ஆணையராக இன்று சென்னையில் பொறுப்பேற்றார்.
அதன் பின்பு அவர் கூறியவாறு சென்னை பொருத்தமட்டில் கொரோனாத் தொற்று வேகமாக பரவி வருகிறது இதனால் மக்கள் தேவை இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் மேலும் அவ்வாறு வந்தாலும் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கட்டயாம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பொதுமக்களின் நலன் கருதி மற்றும் மக்கள் வெளியே வருவதை தடுக்கும் வகையில் மக்கள் குறைகளை காணொலி காட்சி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏதேனும் புகார்கள் இருப்பின் அதனை காணொளி மூலமாகவே தெரிவிக்கலாம் என்று புதிதாக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
மேலும் சென்னையில் பெருநகர காவல் எல்லையில் பணியாற்றிவரும் 2 ஆயிரம் காவலர்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.