மக்களே உஷார்! மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சிக்குள்ளான செய்தி!

0
116
Tamil Nadu Assembly

நாட்கள் செல்ல செல்ல தமிழகத்தில் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் விதித்து அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினாலும் பொதுமக்களின் அலட்சியம் காரணமாக, நாளுக்கு நாள் தமிழகத்தில் தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதேநேரம் தமிழக அரசு சோதனைகளையும் அதிகப்படுத்தி வருகிறது. பல நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறது. இதனை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு தந்தால் இந்த தொற்று பரவல் நிச்சயமாக குறையும். ஆனால் தற்சமயம் இந்த தொற்று பரவல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.இந்த சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. தமிழகத்தில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த நிலையில், சென்னையை பொறுத்தவரையில் இரண்டும் மண்டலங்களில் நாளொன்றுக்கு தொற்றின் பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்து இருக்கிறது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆக இருந்து வருகிறது. ஒரே நாளில் சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் 2109 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் ஒரே நாளில் 2037 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.