Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் புதியதாக 4 கோவிட்-19 உதவி மையங்கள்..!! மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நலம் குறித்த விவரங்கள் மற்றும் பிற தகவல்களை பெறுவதற்காக கோவிட் உதவி மையங்களை அமைத்துள்ளது. இந்த மையமானது 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உதவி மையங்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 உதவி மையங்களின் தொலைபேசி எண்கள்:

1.) அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 94999 66103

2.) ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 78258 84974

3.) அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 044-2836 4964, 044-2836 4965

4.) அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 044-2528 1350

பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையர் பிரகாஷ், கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version