சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறும் விதமாக பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது.தமிழகத்தில் நேற்று ஒரே தினத்தில் 1964 பேருக்கு நோய் தொற்று நோய் பரவல் ஏற்பட்டிருக்கிறது. 28 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்திருக்கிறார்கள் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 242 பேரும், கோயம்புத்தூரில் 229 மேலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 34 மாவட்டங்களில் 100க்கு கீழே இருந்தாலும் 4மாவட்டங்களில் தொடர்ந்து நோய்தொற்று அதிகரித்து வருவதால் அந்தப்பகுதியில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட இருக்கின்ற செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழக அரசு அறிவித்து இருக்கின்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடை பிடிக்க ஏதுவாக சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பாக காவல் துறையுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் இருக்கின்ற உணவு விடுதிகள் திருமண மண்டபங்கள் விருந்து அரங்கங்கள், சமூக நலக் கூடங்கள், உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின் விவரம் தொடர்பாக இணையதளம் மூலமாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பாக முன்னரே உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில் 2812 திருமண மண்டபங்களில் ஆய்வு செய்யப்பட்டு விதியை மீறிய 60 திருமண மண்டப உரிமையாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் 2.29 லட்சம் ரூபாய் அபராதமும், நோய்தொற்று வீதி முறைகளை பின்பற்றாத நிறுவனங்களிடம் இருந்து மே மாதம் முதல் இதுவரையில் 3.70 கோடி ரூபாய் அபராதமும், வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒரே சமயத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதத்தில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் மதரீதியான வழிபாடுகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு வெள்ளி மற்றும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் விதமாக பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும். இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 188 இன்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.