நடிகை கஸ்தூரி பிராமண சமுதாயத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வகையில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூராக பேசியது அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டது.
புகார்கள் அளிக்கப்பட்டதன் பேரில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து அவர் முன் ஜாமின் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்த அந்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேலும் அவர் மனுவை தள்ளுபடி செய்த பின் அவர் தலைமறைவு ஆனார். அதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள பப்புலா பகுதியில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் பங்களா வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
காவல்துறை அதற்கென தனிப்படை அமைத்து கஸ்தூரியை கையும் களவுமாக கைது செய்தனர். அவன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்தூரியை விசரணனை நடத்தினார். மேலும் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் பின் இன்று அந்த மனு விசாரிக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் கொடுத்தது எழும்பூர் நீதிமன்றம்.