Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்தவிதமான தேர்வும் கிடையாது! நியாய விலை கடைகளில் 300-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற நியாய விலை கடைகளில் நேரடி நியமனம் மூலமாக விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்பமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்– 344

கல்வி தகுதிகள்: விற்பனையாளர்: மேல்நிலை வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டுநர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுதப், படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எந்தவிதமான எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:www.drbchn.in என்ற இணையதளத்தில் இணையதளம் மூலமாக மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களின் புகைப்படம், கையெழுத்து, சாதி சான்றிதழ், கல்வி தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் மற்றும் கட்டுநர் விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவை சார்ந்த ஆதரவற்ற விதைவைகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்படுகிறது.

SBI collect என்ற சேவையை பயன்படுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் அல்லது சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நேரடியாக செலுத்தலாம்.

கடைசி தேதி: 14 11 2022 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

Exit mobile version