பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பாக நாம் விரும்பும் சென்னை என்ற தலைப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிவியல்பூர்வமான வழிகாட்டுதல் ஆவணத்தை வெளியிட்டார். சென்னை மறுபடியும் ஒரு வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதன் அடிப்படையில் புதிய நகர்புற மாதிரி இடம்பெற்றிருந்தது என சொல்லப்படுகிறது.
நீர்வள மேலாண்மை ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் தலைநகர் சென்னையை மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பது தொடர்பான கட்டமைப்பு பணிகள் அதில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்த வழிகாட்டுதல் அதை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. வெள்ளத்தில் மிதந்து வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் அந்த வழிகாட்டுதல் அவன் அதை வாங்கி படிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் விருப்பம் கொண்டு இருக்கிறார்கள். அன்புமணி கொடுத்தது என்று எந்தவிதமான பாரபட்சம் பார்க்காமல் சென்னை வாழ் மக்களின் நலனை மனதில் கொண்டு புதிய செயல் திட்டங்களை நிறைவேற்ற முன்வரவேண்டும், நீர்வளம் உள்ளாட்சி வருவாய், பொதுப்பணி துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தரப்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.