Chennai: சென்னையில் உள்ள காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் பொன் வழங்குவது குறித்த அறிவிப்பை அம்மாவட்ட கலெக்டர் விடுத்துள்ளார்.
தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது வரை மாதம் ஆயிரம் ரூபாய் என குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வருகிறது.மேலும் பள்ளி மாணவிகளுக்கு அவர்களின் உயர்கல்வியை தொடர புதுமைப்பெண் திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை அதன் பின் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணமானது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இவ்வாறு இருக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு நல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அவர்களுக்கேற்றவாறு இரு சக்கர வாகனம்,தையல் இயந்திரம்,மிதிவண்டி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மன நலம் குன்றியவர்களுக்கு அவர்களின் பராமரிப்பு பணிக்காக மாதம் ரூ 2000 வழங்கப்பட்டும் வருகிறது.மேலும் காது மற்றும் வாய் பேச முடியாத கண் தெரியாதவர்களுக்கும் உதவித்தொகையானது மாதந்தோறும் வழங்கப்படுகிறது.இவ்வாறு இருக்கையில் சென்னை ஆட்சியர் காது மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், சென்னையில் உள்ள காது மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ஸ்மார்ட் போனானது வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்பவர்கள் தன்களின் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக விண்ணப்பிக்கும் ஆவணமாக தங்களின் மருத்துவ சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்தல் கட்டாயம்.