கோலமிட்டு போராடிய பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பா? ஸ்கெட்ச் போட்ட காவல் துறையினர்

0
159

கோலமிட்டு போராடிய பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பா? ஸ்கெட்ச் போட்ட காவல் துறையினர்

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் “மத உணர்வை காயப்படுத்தும் சட்டம்” என்றும், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் இச்சட்டத்தை அமல்படுத்த கூடாது என்றும், மத்திய அரசு இச்சட்டத்தை திரும்ப பெறக் கோரி திமுக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சில தினங்களுக்கு முன்பு பெரும் திரளான போராட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

திமுக மட்டுமல்லாது நாதக,தவாக போன்ற அதன் கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு பலர் தனது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இதனையடுத்து சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அடுத்தவர் வீட்டு வாசலில் கோலமிட்டு ரகளை செய்த நான்கு பெண்களை திடீரென்று காவல்துறை கைது செய்தது.

இன்னொரு பக்கம், இந்த கைதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி உள்ளிட்டோர் தங்களது வீடுகளின் முன் கோலமிட்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்டாலின் வீட்டு வாசலில் இருந்த கோலத்தை வைத்து கோலம் போடத் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 எம்பிக்களை ஜெயிக்க வைத்தோமா என்று திமுகவை ஒரு புறம் நெட்டிசன்கள் மக்கள் சார்பாக கலாய்த்து வருகின்றனர். அதே போல பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் மூலப் பத்திரம் எங்கே என கோலமிட்டு திமுகவை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோலமிட்டு போராட்டம் நடத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்ட 4 பெண்களில் காயத்ரி கந்தாதே என்பவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினர் என்றும், அரசுக்கு எதிராக போராடும் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர் என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைப்புடன் தொடர்பில் இருப்பதால் மேலும், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.