உலகம் முழுவதும் கட்டடங்கள் உள்ளிட்ட மிக உயரிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து ஆங்காங்கு நில நடுக்கங்கள் ஏற்படுவது தற்சமயம் சர்வ சாதாரணமாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு இடத்தில் நிலநடுக்கம் வருகிறது என்றால் அந்த இடத்தை உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கி கொண்டிருக்கும் ஆனால் தற்சமயம் அப்படி அல்ல எங்காவது நிலநடுக்கம் ஏற்பட்டால் பத்தோடு பதினொன்று என்று தான் அனைவரும் பார்க்கிறார்கள்.
பொதுவாகவே ஜப்பானை எடுத்துக்கொண்டால் அது ஒரு பூகம்ப நாடு என்று தெரிவிப்பார்கள் ஏனென்றால் அங்குதான் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படும் சுனாமி வருத்தமாய் இருந்தது. ஆனால் தற்சமயம் அப்படி அல்ல உலக நாடுகள் அனைத்திலும் அவ்வபோது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.ஏனென்றால், அனைத்து நாடுகளிலும் சுரங்கம் தோண்டுதல் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல், போன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. உதாரணமாக நெய்வேலி நகரத்தில் இருக்கக்கூடிய பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை செல்லலாம் அந்தப் பகுதியில் ஆரம்பத்திலிருந்தே நிலக்கரி சுரங்கம். தோண்டப்பட்டு அங்கே பழுப்பு நிலக்கரி எடுத்து அதன் வழியாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு இடங்களில் தமிழகத்தில் பலன்கள் தோன்றுவதும் கட்டிடங்கள் கட்டுவதுமாய் வேலைகள் நடைபெற்று வருகிறது.
அதோடு சிமெண்ட் பேக்டரிகள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும் பள்ளங்களை அதிக அளவில் தோண்டுகின்றன. இதனால் அந்த பேக்ட்ரிகளுக்கு அருகில் இருக்கக்கூடிய கிராமங்கள் எப்போதும் அபாய நிலையிலேயே இருந்து வருகிறது.இந்த நிலையில், கடந்த சில வாரத்திற்கு முன்னதாக அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. சென்ற சில தினங்களுக்கு முன்னதாக ஹைதி நாட்டில் உண்டான நிலநடுக்கம் காரணமாக, சுமார் 2300 க்கும் அதிகமானோர் உயிர் இழந்தார்கள்.
இந்த சூழ்நிலையில், இந்திய நிலநடுக்க ஆய்வியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை, ஆந்திரா, அருகே இருக்கக்கூடிய வங்கக்கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறது. அதோடு பகல் 12:35 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.சென்னையின் கிழக்கு வங்க கடல் பகுதியில் காக்கிநாடாவில் இருந்து 296 கிலோமீட்டர் தொலைவில் கடல் பரப்பில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உண்டாகி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு சென்னையிலும் உணரப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.