Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அப்பாடா ஒரு வழியா கிடைச்சிடுச்சு! ஜாமீன் கிடைத்த நிம்மதியில் ஜெயக்குமார்!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று நேற்றைய தினம் அந்த தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியை ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவிலுள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு பிரச்சினை குறித்து திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தகராறு உண்டானது.

அப்போது அங்கே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திமுகவின் தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவருடைய சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து வந்து காவல்துறையில் ஒப்படைத்தார்கள் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதுகுறித்து வழங்கப்பட்ட புகாரினடிப்படையில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 10 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவருடைய ஜாமீன் மனுவை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சூழ்நிலையில், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் ஜெயக்குமார்.

இன்று இந்த ஜாமீன் மனு விசாரணை நடைபெற்றது அப்போது காயமடைந்தவர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

அதாவது திருச்சியில் தங்கி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் மீது 3 வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன இதில் 2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version