தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0
156
Chennai High Court Questions About Anti Corruption Department

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கடந்த 2018 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றசாட்டின்  அடிப்படையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 70,060 ரூபாய் பணமானது அங்கிருந்து கைப்பற்றபட்டது.
இதனையடுத்து இந்த லஞ்ச விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தண்டிக்கும் விதமாக தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பாக பிறப்பிக்கப்பட்ட இடமாறுதல் அரசாணையில், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர் கோபால கிருஷ்ணனை மீண்டும் சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவருக்கு வழங்கியுள்ள இந்த இடமாற்றமானது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும், லஞ்சம் பெற்று தான் அவருக்கு இந்த இடமாற்ற உத்தரவு பிறபிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் அவருக்கு வழங்கப்பட்ட இந்த இடமாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது,ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது, ஊழல் காரணமாக நில அபகரிப்புகள் நடப்பதாகவும், நீர் நிலைகள் மாயமாவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையானது அரசியல் கட்சிகளிடமிருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது? என்றும், இதுதொடர்பான விளக்கத்தை 3 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.