Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

#image_title

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் நகரம் சென்னை என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை காவல்துறை மானியக் கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்றது, அந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.

அப்போது காவல்துறை கொள்கை விளக்கம் குறித்து சில தகவல்கள் வெளியாகின.

“காவல்துறை இயக்குனரின் தலைமையின் கீழ்

5 கூடுதல் காவல் ஆணையர்கள்

7 காவல் இணை ஆணையர்கள்

31 காவல் துணை ஆணையர்கள், என பெருநகர காவலருடன் பணியாற்றுகின்றனர்.

சென்னையில் மட்டும் 23,791 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதிலும் சென்னை பெருநகர காவல் துறையில் மட்டும் 7 காவல் நிலையங்கள் ISO தர சான்றிதழ் பெற்றுள்ளது.

மேலும் கடந்த ஆண்டுவரை மட்டும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 537 பேரை கைது செய்ததுடன், கஞ்சா, மது போன்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

நேர்மையாக செயல் பட்டதால் சென்னை பெண்களின் பாதுகாப்பு நகரம்” என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிவித்துள்ளது.

புதிதாக மகிழ்ச்சி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள், மனநலம் பாதிக்கப் பட்டவர்கள், தற்கொலைக்கு முயன்றவர்கள் என அனைவருக்கும் மருத்துவர்கள் மூலம் கவுன்ஸ்லிங் கொடுக்கப்பட்டு,அனைவரையும் காப்பாற்றி வருகின்றனர். இதற்காக  25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .

Exit mobile version