Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!

மார்ச் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமையான நேற்று (மார்ச் 19) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால், அலுவலகம் செல்வோர், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்காத தமிழ்நாடு அரசை கண்டித்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதன்படி, அண்ணா சாலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், “திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஆட்டோக்களுக்கான அனைத்துக் கட்டண வகைகளும்  உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஆட்டோ ஓட்டுநா்களுக்கான வாடகைக் கட்டணத்தை உயா்த்தாமலேயே காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், தினசரி நாங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்.

எனவே, எங்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காண, போக்குவரத்துத் துறையின் மானியக் கோரிக்கையின்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால், மார்ச் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Exit mobile version