கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் முதலமைச்சர் அஞ்சலி!

0
134

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் திமுகவின் தலைவருமான கருணாநிதி ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி அன்று கடந்த 2018ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்து இருக்கின்றார் என்ற பெருமையும் அவரை சார்ந்து இருந்தது. தமிழக திரையுலகில் கதை உரையாடல் உள்ளிட்டவற்றின் மீது நாட்டம் கொண்டு பல திரைப்படங்களை எழுதியிருக்கிறார் கருணாநிதி.

தூக்குமேடை என்ற நாடகத்தின் சமயத்தில் நடிகர் எம் ஆர் ராதா கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை வழங்கினார். அதுவே அடுத்தடுத்த நாளில் கலைஞர் கருணாநிதி என திரு மு கருணாநிதியை மாற்றியது. தமிழகம் மற்றும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் கருணாநிதி இருந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி பிறந்த இவர் அவருடைய உழைப்பை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக சென்னை வரும்போது தொடர் வண்டியில் பயணச்சீட்டு இல்லாமல் வந்து வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் முன்னேறியதாக தொண்டர்கள் இதுவரையில் பெருமையாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தற்போதைய திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவைச் சார்ந்த அமைச்சர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மூன்றாவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.