ஒன்னும் நடக்காது! திமுக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்த சவால்!

0
135

தேசிய அளவில் மருத்துவ கல்வி பயில்வதற்கு நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது மத்திய அரசு ஆனால் இதற்கு பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் அந்த எதிர்ப்புகள் அனைத்தும் தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தில் நடைபெறுவதைப் போல இந்த நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நடப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரையில் 15 மாணவ மாணவிகள் இந்த நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை கவனிக்கும்போது தமிழகத்தில் கல்வித்துறை எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தாலும் கூட இந்த நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அவருடைய மருத்துவர் கனவு கலைந்து போகிறது. ஆகவே கல்வித் துறை தமிழகத்தில் எவ்வாறு இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை சென்னையில் இருக்கின்ற மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது கடந்த 2010ஆம் வருடம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயத்தில்தான் இத்தேர்வு முதன்முதலாக கொண்டுவரப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

இந்த நீட் தேர்வு முதன் முதலாக இந்தியாவில் கொண்டு வந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.அப்போது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தான் திமுகவும் இருந்தது தமிழக மக்கள் இந்த நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தைரியமிருந்தால் நீட் விவகாரத்தில் 2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நீட் தேர்வுக்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார்கள் என்ற வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை.

நீட் தேர்வை காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்டுவந்தாலும் ஏழை ,எளிய மாணவர்களுக்கு தமிழக மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது இல்லை. இதுவே எங்கள் கட்சியின் கொள்கை தலைகீழாக நின்று தீர்மானத்தை நிறைவேற்றினால் கூட திமுக அரசால் எதையும் சாதித்துவிட இயலாது என கூறியிருக்கிறார் அண்ணாமலை.