Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் காவல்துறை உதவி ஆணையாளர் பலி கொண்ட கொரோனா!

சென்னையில் இருக்கின்ற பல்லாவரம் பகுதியில் காவல் உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் ஈஸ்வரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உதவி ஆணையாளருக்கு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். அவருடைய மறைவு காவல் அதிகாரிகள் இடையே மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

அத்துடன் சென்னையைப் பொருத்தவரையில் நோய்த்தொற்று பரவல் அதிகளவு இருக்கும் சூழ்நிலையில், தற்போது வரையில் 24 காவல்துறை அதிகாரிகள் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் இந்த இழப்பு மாபெரும் சோகத்தை உண்டாக்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

Exit mobile version