Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை மக்களே உஷார்! மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து!!

Electric train service canceled

Electric train service canceled

சென்னை மக்களே உஷார்! மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து!!

ரயில் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர், விழுப்புரம், வழித்தடங்களில் இன்று முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் புறப்படும் (11.59)ரயிலானது ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் (11.40) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் இரவு 12.25 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை பராமரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து அக்டோபர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 15 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து சென்னைக்கு புறப்படும் புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தஅனைத்து ரயில் சேவை ரத்ததுகளும், இரவு நேரங்களில் மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version