இந்தியாவைப் பொறுத்தவரையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
அதனடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம். உள்ளிட்ட இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் 5 மாநில சட்டசபை பொதுத் தேர்தல்கள் தான் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.பலர் யூகத்தின் அடிப்படையில் அதனை தெரிவித்திருந்தாலும் அதுதான் உண்மையும் கூட என்று ஒருசிலர் அடித்துக் கூறுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், உத்திரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்தவுடன் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் பதற்றம் காரணமாக, அதிகரித்திருப்பதால் பெட்ரோல் டீசல் விலையும் இந்தியாவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த மாத இறுதிக்குள் ஆதார், பான் கார்டுகளை இணைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் அரசு திட்டங்களின் கீழ் தொடர்ந்து பயன்பெற k.y.c தகவல்களை வங்கி கணக்கில் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது.
இந்தியன் வங்கி ஏடிஎம் களில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்கள் வராது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது ஆனாலும் இந்தியன் வங்கி கிளைகளில் நேரடியாக சென்று 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வாங்குவதற்கு மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதுவரையில் பாஸ்ஸ்டேக் இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் 105 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 19 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் இன்று முதல் சென்னையில் 2,040 ரூபாய்க்கு எதிராக 2145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் 117 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே நிலையில் நீடித்து வருகிறது. அதாவது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101. 40 காசுக்கும், டீசலின் விலை 91.43 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.