தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா?
பொதுவாகவே நமக்கு மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை நிலவரம் சற்று தலைசுற்றும். அந்தளவிற்கு விலைவாசி ஏற்றம் காணப்படும். ஏனென்றால் வரத்து குறைவு அல்லது மழையினால் ஏற்படும் சேதங்கள் என நாம் கருத வேண்டி இருக்கும். அப்படித்தான் தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கன மழை பொழிந்து வருகிறது.
இந்த கனமழை அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் மற்றொரு காரணமாக பெட்ரோல் விலை உயர்வையும் சொல்லலாம் . எப்போதுமே அதன் காரணமாக காய்கறிகளின் விலை எப்போதுமே அதிகரிப்பது சாதாரணமாக அதாவது வழக்கமாக நடைபெறும் செயல் தான். தற்போது சென்னையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது. அதன் எதிரொலியாக தக்காளியின் விலை இன்றைய நிலவரப்படி நூறு ரூபாயை தொட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்பு வரை சில்லறை கடைகளில் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை, தற்போது 100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சந்தைக்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக விலை அதிகளவு அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தக்காளியை போன்றே மற்ற காய்கறிகளின் விலை பட்டியலும் மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் அரசு இதற்கு நல்ல தீர்வை தர வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.