கோரிக்கை வைத்த சென்னைவாசிகள்! அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!

0
111

சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகின்றார்.

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய, மழை பெய்ததன் காரணமாக, பல பகுதிகளில் மழைநீர் தேங்கி சென்னைவாசிகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது, இதன் காரணமாக, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அதேபோல் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் என்று அனைவரும் களப்பணியில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

எழும்பூர் டவுட்டன் கே.என். கார்டன், புதிய அரண்மனை சாலை, ஓட்டேரி இடது பாலம், கான்ப்பூர் நெடுஞ்சாலை, பாடி பாலம், சத்யா நகர், தங்குமிடம் உள்ளிட்ட இடங்களிலும், பாடி பாலம் வழியாக பாபா நகர், ஜி கே எம் காலனி, ஜவஹர் நகர், வழியே காகித ஆலை சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும், முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட இருக்கிறார் என்று அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் தன்னுடைய ஆய்வை ஆரம்பித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலை வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த சமயத்தில் பொதுமக்களிடம் மழை பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்தார். அந்த சமயத்தில் மழையால் மின்சாரம் இல்லை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் தேவைப்படுகிறது அதனை செய்து தர வேண்டும் என்று முதலமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்.

அந்த சமயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர் கே என் நேரு, சேகர்பாபு, தமிழக காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங்பேடி, உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள்.

அந்த சமயத்தில் மழை நீரை மிகவும் துரிதமாக வெளியேற்ற வேண்டும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து திமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேவையான அனைத்து நிவாரண பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.