பணமோசடி வழக்கு! செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

0
123

சென்ற 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.

இந்த நிலையில், அதிமுக தலைமைக்கும் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அதிமுகவில் இருந்து விலகி அவர் திமுகவில் இணைந்தார். இதனை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவருடைய சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்திலேயே திமுக சார்பாக அவரை வெற்றி பெற வைத்து தன்னுடைய அமைச்சரவையிலும் இடம் அளித்து விட்டார்.

இதனையடுத்து கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக தெரிவித்து 81பேரிடம் 1.62 கோடி மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் போன்றோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் தெரிவித்தார்கள்.

அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அண்ணராஜ்,, பிரபு, சகாயராஜ் போன்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கின்ற சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற இந்த வழக்கில் நாற்பத்தி ஏழு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், புகார்தாரர் அவர்களின் வாக்குமூலங்களை குற்றம் சாட்டப்பட்ட 47 நபருக்கும் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு நீதிபதி என் ஆலிசியா முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் செந்தில் பாலாஜி மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்ட இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து வாக்குமூலத்தின் நகலை பெறுவதற்காக அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட இருவருக்கும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்.