அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!!

0
206
Chennai team players showed action!! Qualified for the play-off round as the second team!!
அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!!
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது மே 20ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சென்னை அணியின் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து 79 ரன்களிலும், டெவான் கான்வே அரைசதம் அடித்து 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சிவம் தூபே அதிரடியாக விளையாடி 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க இறுதியாக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 20 ரன்களும் தோனி 5 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் பந்துவீச்சில் நோர்க்கியா, சேட்டன் சகாரியா, கலீல் அஹமது மூவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
224 என்ற இமாலய இலக்கை கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் பிரித்வி ஷா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஒரு பக்கம் டேவிட் வார்னர் ரன் சேர்க்க மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் அடித்து 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சில் தீபக் சாஹர் மூன்று விக்கெட்டுக்களையும் தீக்சனா மற்றும் பதிரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது.