Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் கூறிய அறிவிப்பு !!

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தேர்தல் நடத்த ஏற்பாடாகி வரும் நிலையில் ,இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில் ,தேர்வுகளுக்கான பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளனர்.தமிழகப் பல்கலைக்கழகத்தின் சில ஆன்லைன் மூலமாகவும் ,சில நேரடியாகவும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை பல்கலைக்கழகமானது , ஆன்லைன் மூலமாக தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் பலருக்கு ஆன்லைன் தேர்வு எழுத தேவையான இணைய வசதி உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறு போன்ற புகார்கள் வந்தது .இதற்கு சென்னை பல்கலைக்கழகம் இணைய வசதி இல்லாத மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி  ,ஸ்பீட் போஸ்ட் மூலமாக சென்னை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று மாணவர்க்கு பல்கலைக்கழகம் அறிவுறுத்தியது.

Exit mobile version