Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜூன் மாதம் நடைபெறவிருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

ஜூன் மாதம் 2ஆம் தேதி நடக்கவிருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க இருந்த தேர்வுகள் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் ஆரம்பித்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு இங்கு அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் எல்லா கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் என்ன காரணத்திற்காக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது? என்று இதுவரையில் தெரியவில்லை. இதன் காரணமாக, தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அதேசமயம் தேர்வுக்கு படிப்பதற்கு கூடுதலான நாட்கள் கிடைத்திருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னையில் இருக்கும் பழமையான பல்கலைக்கழங்களில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இது கடந்த 1851 ஆம் வருடம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

Exit mobile version