Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை இளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!!

Chennai youth here is super news for you!! Huge private placement camp!!

Chennai youth here is super news for you!! Huge private placement camp!!

சென்னை இளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!!

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள்.

மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்  கடந்த ஓராண்டாக அனைத்து மாவட்டங்களில் நடந்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை ராயபேட்டையில் உள்ள நியூஸ் கலாஜ் வளாகத்தில் மாபெரும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை ஐடி, தனியார் தொழில் நிறுவனம், உணவகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.

இது தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த முகாமில் 1000 திற்கும் மேற்பட்ட் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5  மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த முகாவில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கட்டயாம் எடுத்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Exit mobile version