சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நடிகை குஷ்பூ அவர்களும் தமிழக பாஜகவின் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்களும் திறந்து வைத்து இருக்கிறார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பூ சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த தொகுதியில் பொறுப்பாளராக மட்டுமே நான் நியமிக்கப்பட்ட இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணியை செய்யும். பிரபலமான நபர்களுக்கு பதிலாக வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான் பாஜகவின் வழக்கமான பாணி. ஆகவே பாஜகவில் இருக்கும் நெறிமுறைகளின் படி சீட்டு கொடுக்கும் பாஜக. பாஜக வேட்பாளரை அறிவிக்க இன்னும் நேரம் இருப்பதாக சொல்லப்படுகிறது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல் ,டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நடிகை குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.