செவ்வாய் விரதத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

0
154

நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி தொடர்புடையவர் முருகன் ஆகவே தான் செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை மிகவும் தனித்துவம் பெற்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இந்த விரதம் இருக்கலாம், இருந்தாலும் கூட செவ்வாய்க்கு நேரடி தொடர்புடைய முருகன் கோவில்களுக்குச் சென்று அங்கேயே இரவு தங்கி ஒருநாள் விரதமிருந்து அந்த தளத்திலிருக்கும் முருகன் சன்னதியில் அபிஷேக, ஆராதனைகள், செய்து முருகனை பூஜை செய்தால் அதிக பலன் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.

செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்னர் எழுந்து நீராடிவிட்டு விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும், அதன்பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை சபித்து சிவதியானம் செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சூரியனைப் பார்த்து ஓம் சிவசூர்யாய நாமே என தெரிவித்து நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து சிவன், பார்வதி, முருகன், உள்ளிட்டோரை மனதிற்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜபம் செய்து 100 கிராம் மிளகை ஒரு துணியில் முடிந்து ஓம் வைத்திலிங்கார்ப்பணம் என தெரிவித்து ஒரு இடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்து உபசரித்தால்
நன்று

சாதம் உள்ளிட்டவற்றை படைத்து தாம்பூலம் தட்சிணை, வழங்கி அதன் பிறகு சுத்தமாக பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம், உள்ளிட்டவை சேர்த்த உப்பில்லாத பொங்கல் பொங்கி நிவேதனம் செய்து, அந்த பிரசாதத்தை அரை வயிறு மட்டும் சாப்பிட்டு அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவதியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் உள்ளிட்டவற்றை படிக்க அதனைக் கேட்டு அதன் பிறகு எதுவும் சாப்பிடாமலேயே இரவு பாய் தலையணை உள்ளிட்டவையின்றி வெறும் தரையில் கம்பளம் விரித்து படுத்துறங்க வேண்டும்.

இதுவே செவ்வாய் விரதமாகுமாகும் நவகிரகங்கள் 9 கோள்களில் ஒன்று அங்காரகன் எனும் செவ்வாய் கிரகம் என்று சொல்லப்படுகிறது.

அரத்தின், அழல் அறிவன், ஆரல், உதிரன், குருதி, செந்தில்வண்ணன், மங்கலன், வக்கிரன் என பற்பல பெயர்கள் இந்த கிரகத்துக்குண்டு.. இந்த செவ்வாய் கிரகத்திற்கும், முருகப்பெருமானுக்கும், மிக நெருங்கிய தொடர்புகளுண்டு என்று சொல்லப்படுகிறது.

செவ்வாய்க்கும், முருகனுக்கும், மட்டுமல்ல செவ்வாய்க்கும், பூமிக்கும், கூட தொடர்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. முருகனுக்கும், பூமிக்கும், செவ்வாய்க்கும், பூமிக்கும், செவ்வாய்க்கும், முருகனுக்கும், தொடர்பிருப்பதால்தான் பூமியில் நாம் செவ்வாயின் அம்சமாக முருகனை வழிபட்டு கொண்டிருக்கிறோம். இதனால்தான் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடவும், விருதமிருக்கவும், ஏற்ற நாளாக அனுசரிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகளில் வீட்டு வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் அம்மன் பாடல்களை துதித்து பாடுவது மிகவும் நன்று என சொல்லப்படுகிறது. சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

பெண்குழந்தைகள் அம்மனாக பாதிக்கப்பட்டு அவர்களுக்கு உணவளித்து மேலும் அவர்களுக்கு தாம்பூலம், வளையல், ரவிக்கை, குங்குமச் சிமிழ், கண்ணாடி, சீப்பு, மருதாணி, மஞ்சள், போன்றவற்றைக் கொடுத்து சிறப்பித்தால் தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி செவ்வாயன்று தலை குளித்து விட்டு அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ஆடி செவ்வாயில் விரதமிருந்தால் விரைவில் திருமணம் கைகூடும், மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் ஐதீகமிருக்கிறது.