திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் அமைந்துள்ள மிகவும் பழம்பெருமையான, பஞ்சபூத தளங்களில் ஒன்றான ஸ்ரீநடராஜர் கோவில் தில்லைவாழ் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தில்லை நடராஜர் திருகோவிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சோழ வாரிசுகளுக்கு முடிசூட்டுவதும் மற்றும் ஆன்மீகம் தவிர்த்த வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த ஆகமவிதிகள் அனுமதிக்கவில்லை.
தீட்டாக்கிய திருட்டு திருமணம்:
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் ஆகம விதிகளை மீறி ஒரு திருட்டுத்தனமான திருமண நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது அந்த திருமண நிகழ்ச்சிக்காக கோவிலை அலங்கரிக்கவும், தோரணம் கட்டுவதற்கும் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யவும் திரு தில்லை நடராஜர் கோவில் இரவு முழுவதும் திறந்து இருந்திருக்கின்றது. மேலும் அந்த திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார வேலைகள் செய்தவர்கள் , பொற்கூரையின் மீது ஏறி அமர்ந்து அலங்கார வேலைகள் செய்துள்ளனர். அந்த அலங்காரம் செய்தவர்கள் கோவிலுக்குள்ளேயே உறங்கியுள்ளார்கள், தில்லை நடராஜர் கோவிலில் நான்கு கோபுரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலணி அணிந்துசெல்ல அனுமதியில்லை.

இவ்வாறு ஆகமவிதிகள் பின்பற்றப்படும் நிலையில் இதையெல்லாம் மீறும் வகையில் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியில் கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சி அங்கு நடந்தேறியதால் புனித தலமான தில்லை நடராஜர் கோவில் தீட்டு பட்டுவிட்டது, மேலும் புராதான சின்னமான தில்லை நடராஜர் கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் பொற்கூரை சேதமடைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கபடுகின்றது.
மேலும் கோவிலிலுள்ள பொற்கூரையின் தங்கத் தகடுகள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேக்கபடுகின்றனர் சிவபக்தர்கள். ஆகையால் கோவில் ஆகம விதிகளை மீறி திருட்டுத்தனமாக நடந்தேறிய இந்த திருமண நிகழ்ச்சியால் அந்த மணமக்களையும் , அவர்களின் பெற்றோர்களும் ஜென்ம ஜென்மத்திற்கும் நீங்காத பாவத்தில் செய்தவர்களாகின்றனர் எனவும் சிவபக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த திருட்டு திருமணம் நடக்க துணைபோன தீட்சிகர்கலை அரக்கர்கள் என்றும் பக்தர்களுக்கிடையே ஒரு விமர்சன கருத்து நிலவுகின்றது.

கோவிலுக்கு வரும் பக்தர்களை நிழற்படம் எடுக்கவே அனுமதிக்காத தில்லைவாழ் தீட்சிதர்கள் , இந்த திருட்டுத்தனமான திருமண நிகழ்ச்சியில் “வீடியோ கேமராக்கள்” பயன்படுத்தபட்டிருக்கின்றது. தீட்சிதர்களுக்கு “துட்டு ” கொடுத்தால் எப்படி வேண்டுமென்றாலும் நிழற்படம் எடுக்கலாம் , காணொளி எடுக்கலாமோ என்று பக்தர்களும் தில்லைவாழ் தீட்சிதர்கள் முன்பே பேசி கொள்கின்றனர்.

எப்போது தீட்டுக்கழியும்?
சிவத்தொண்டர்கள், சிவபக்தர்கள் மற்றும் சமூக சேவகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வை அனைவரும் பொதுமக்கள் அனைவரும் கண்டிக்கின்றனர். இந்த நிகழ்வை கண்டித்து சமூக சேவகர்கள் தில்லையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இனிவரும் நாட்களில் இந்த திருட்டுத்தனமான திருமணத்தால் தீட்டு ஏற்படுத்திய தீட்சிதர்களை எதிர்த்து போராட்டங்கள் நடக்கும்.
இந்த போராட்டங்களால் தில்லை வாழ் தீட்சிதர்களால் தீட்டான திருத்தலம் எப்போது தீட்டுகழிக்கப்பட்டு, அந்த கோவிலுக்கு உரிமையுள்ள சோழர் பரம்பரையினருக்கு எப்போது முடிசூட்டு விழா நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் பேசி வருகிறார்கள்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.