Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் உரிமை அறநிலையத்துறைக்கு இருக்கிறது! அமைச்சர் சேகர்பாபு!

சிதம்பரம் நடராஜர் ஆலயம் சோழ சாம்ராஜ்யத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்டது என்பது பலரும் அறிந்தது தான்.

சோழர்கள் தனி அந்தஸ்துடன் திகழ்ந்த சமயங்களில் சோழர்களின் குலதெய்வமாக இந்த சிதம்பரம் கடற் கரும்புலி கோவில் விளங்கியது. சோழர்களின் காலத்தில் தான் அந்த கோவிலுக்கு பொற்கூரை மெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலும் அதே அளவிற்கு இன்றளவும் தனி சிறப்பம்சத்தை பெற்றிருக்கிறது. இந்த சிதம்பரம் நடராஜர் ஆலயம்.

சோழர்கள் நலிவுற்ற பிறகு அந்த கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் கையில் ஒப்படைத்தது சோழர் சாம்ராஜ்யம்.

ஒருவேளை பின்னாளில் நம்முடைய சந்ததியினரால் இந்த கோவிலை பராமரிக்க முடியாவிட்டால் இந்த கோவிலின் பாரம்பரியம் சிதைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் தீட்சிதர்கள் கையில் சோழர் சாம்ராஜ்யம் இந்த கோவிலை ஒப்படைத்தது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தவறு எங்கு நடந்தாலும் அதனை தட்டி கேட்கின்ற சுட்டிக் காட்டும் கடமை இந்து சமய அறநிலைத்துறைக்கு இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்றும் தீட்சிதர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. நம்மை ஆண்ட மன்னர்களால் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

கோவிலினுள் பல கட்டிடங்களை எழுப்பியிருக்கிறார்கள். இப்படி எழுப்பப்பட்ட கட்டிடங்கள் நிலை தொடர்பாக கேள்வி எழுப்புவது எங்களுடைய கடமை. அந்த திருக்கோவிலில் மன்னர்களால் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள், நகைகள், விலைமதிப்புள்ள பொருட்கள் நிலையை ஆய்வு செய்வதும் எங்களுடைய கடமை என்று தெரிவித்தார். இதற்கு தீட்சிதர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் பணி நியாயத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. தீட்சிதர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன். எந்த விதமான அத்துமீறல்களும், அதிகார துஷ்பிரயோகமும் செய்யவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Exit mobile version