Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடைகள் தாலி கட்டிய விவகாரம்! வீடியோ எடுத்த நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

அப்படி செல்லும்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் சீருடையிலும், பாலிடெக்னிக் படிக்கும் கல்லூரி மாணவன் கல்லூரி சீருடையிலும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தபடி தாலி கட்டிக் கொண்டார்கள்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், காவல்துறையினர் ஏற்கனவே மாணவருக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்ட சிதம்பரம் பகுதியை சார்ந்த பாலாஜி கணேஷ் என்பவரை காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அப்போது அவருக்கு உடல்நிலை குறைவு உண்டானதால் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தொடர்ந்து சிகிச்சை முடிவடைந்த பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version