சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்!

0
180
Chidambaram, virginity test for girls

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்!

சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என், ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள் என்று கூறிய ஆளுநர் ஆர்.என், ரவி தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள்  திருமணம் செய்து வைக்கவில்லை எனவும்,  மேலும் அதில் உண்மையில்லை என்றும்  கூறினார்.

மேலும் குழந்தைகளின் பெற்றோர்களை காவல்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்று ‘இரண்டு விரல் பரிசோதனை” என்னும்  கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்படுகிறது, இந்த கொடுமைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு அந்த சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றனர்.

இது குறித்து விளக்கம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினேன் என்று ஆளுநர் ஆர்.என், ரவி கூறியுள்ளார். ஆளுநரின் இந்த பரபரப்பு பேட்டியின் காரணமாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தமிழ்நாடு தலைமை செயலர் இறையன்புக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது.

இதன் அடிப்படையில், கட்டாய கன்னித்தன்மை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.