சிறையில் இருந்து கடிதம் எழுதிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! படித்துக் காட்டிய மனைவி சுனிதா!
புதிய மதுபானக் கொள்கை ஊழல் காரணமாக சிறையில் திகார் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாட்டு மக்களுக்காக எழுதிய கடிதத்தை அவருடைய மனைவி சுனிதா அவர்கள் படித்து காட்டியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையிலிருக்கும் டெல்லி முதல்வர் நாட்டு மக்களுக்காக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை டெல்லி மக்களுக்காக அவருடைய மனைவி சுனிதா படித்து காட்டினார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் “நான் தற்பொழுது சிறையில் இருக்கிறேன். இருந்தாலும் டெல்லியில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களும் என்னுடைய குடும்பம் தான். நான் சிறையில் இருக்கும் ஒரே காரணத்தினால் என்னுடைய டெல்லி மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் வந்துவிடக் கூடாது. எனவே அனைத்து மக்களும் தினமும் அவரவர் தொகுதிகளுக்கு செல்லுங்கள். அவர்களின் பிரச்சனையை கேட்டு அறிந்து அதை சரி செய்யுங்கள்” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மனைவி சுனிதா படித்து காட்டினார்.
முன்னதாக புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது சொய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தன்னுடைய கைதை எதிர்த்து தில்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதாவது தேர்தல் சமயத்தில் என்னை கைது செய்யும் அமலாக்கத்துறையினரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தாக்கல் செய்த இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று(ஏப்ரல்3) நடைபெற்றது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஸ்வர்ண கந்த ஷர்மா அவர்கள் இந்த வழக்கில் தீர்ப்பை கூறாமல் தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.